கொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று (04) இரவு 9 மணி முதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தன்படி, கொலன்னாவ நகரசபை, கடுவெல நகரசபை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நீர் வெட்டு இன்று (04) இரவு 9 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு வேலை காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.