Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் அபராதம்...!

 

எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சட்டவிரோதமாக ஆடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் kandy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 3600 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 11 இலட்சம் ரூபா) அபராதம் விதிக்க போட்டிக்குழு தீர்மானித்துள்ளது.



வனிந்து ஹசரங்க இந்த ஆண்டுக்கான போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இந்த அபராதத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் அந்தந்த அணிகளின் நிறங்களில் ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிலையில், வனிந்து ஹசரங்க வித்தியாசமான சின்னத்துடன் கூடிய "தலைகவசம்" அணிந்து விளையாடியிருக்கிறார்.



அதனை கழற்றி அகற்றுமாறு நடுவர் ரோலி பிளாக் அறிவித்திருந்த நிலையில், நடுவரின் தீர்ப்பை ஏற்காததால் வனிந்துவுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



இச்சம்பவம் காரணமாக எல்.பி.எல் போட்டியின் அனைத்து வீரர்களுக்கும் தமக்கு சொந்தமில்லாத ஆடைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »