Our Feeds


Tuesday, July 16, 2024

SHAHNI RAMEES

"10 லட்சம் ரூபாய் செலவில்" ஆரம்பிக்கப்பட்ட தெலும்புகஹவத்தை பாடசாலையின் பாதுகாப்பு மதிலினை சீரமைக்கும் பணி...

 

📚🏢🚧🚜 “ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின்” ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் நாட்டில் நடாத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கமைய ; அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களின் முயற்சி மற்றும் வேண்டுகோளுக்கிணங்க

பாடசாலைகளின் வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்று வரும் வேலை திட்டத்தின் ; அக்குறணை பிராந்தியத்துக்கான இரண்டாவது கட்ட வேலைத்திட்டம்,  

நீண்டகாலமாக பாதுகாப்பற்ற நிலையில் இருந்த தெலும்புகஹவத்தை முஸ்லிம் பாடசாலையின் பாதுகாப்பு மதிலினை சீரமைக்கும் பணி சுமார் பத்து இலட்சம் (10,00,000 LKR) ரூபா செலவில் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தெலும்புகஹவத்தை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒத்துழைப்புடன் “V Care" அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ரியாஸா ஆசிரியை,  முன்னாள் அதிபர் ரியால்தீன் அவர்கள், "V Care” அமைப்பின் தலைவர் ஹாஸிர், பொருளாளர் பாஹிம் அவர்கள் உட்பட அங்கத்தவர்கள் , தக்வா மஹல்லா தலைவர் (Choice park) தஸ்லீம் அவர்கள் மற்றும் சகோதரர் ரவ்ஸான் உட்பட நலன் விரும்பிகள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »