Our Feeds


Thursday, July 18, 2024

Sri Lanka

100 ரூபா பணம் திருடியதற்காக மகனுக்கு சூடு வைத்த தகப்பன் - நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு



தனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடினான் என்ற குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சேட் பொக்கட்டில் இருந்து நூறு ரூபாயை திருடி செலவளித்தார் என்ற குற்றத்திற்காகவே தகப்பனால்  திங்கட்கிழமை இக் கொடுர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சம்பவம் பற்றி அறியவருவதாவது தனது சேட் பக்கட்டில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த தகப்பன் தனது மகனிடம் எனது சேட் பொக்கட்டில் இருந்து பணம் எடுத்ததா என்று கேட்கவும் மகன் ஆம் நான் எடுத்து செலவளித்து விட்டேன் என்று கூறியதற்கிணங்க தகப்பன் மகனுக்கு சூடு வைத்துள்ளார்.


அடுத்தநாள் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறிய நிலையில் பாடசாலைக்கு செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.


செவ்வாய்க்கிழமை பாடசாலையில் மாணவன் சோகமாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.


மாணவனின் நிலையை அறிந்த பாடசாலை நிர்வாகம்  வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச் சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து  மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »