பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட
சுமார் 100 வருடத்திற்கும் அதிக கால பழைமை வாய்ந்த இறக்குவானை பகுதியிலுள்ள பிரதான பாலமொன்று வீதி அபிவிருத்தி பணிகளுக்காக அகற்றப்படுகின்றது.தொல்பொருள் பெறுமதி வாய்ந்த காரணத்தினால், இறக்குவானையில் அகற்றப்படும் பாலம், அநுராதபுரம் – மெல்சிறிபுற பகுதியில் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த பாலம் அகற்றப்படுகின்றமைக்கு இறக்குவானை மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த பாலம் அவ்வாறே இருக்க, புதிய பாலத்தை நிர்மாணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமது பிரதேசத்தின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படும் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.