கண்டி பிரதேசத்தில் ஆசிரியை ஒருவருக்கு திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்த வழக்கில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் சாமர விக்ரமநாயக்க நேற்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.
திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் 10 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கானது சுமார் 13 வருட காலமாக கண்டி நீதவான் நீதிமன்றத்திலும், மேலதிக நீதவான் நீதிமன்றத்திலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று (12) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.