Our Feeds


Monday, June 10, 2024

SHAHNI RAMEES

#VIDEO: எனது முறைப்பாட்டுக்கு விசாரணை தேவையில்லை – ஹர்ஷ

 

தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.





இதன்படி, ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதனால் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது. அப்போது விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தார்.

விசாரணையை ஆரம்பித்தமைக்காக பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாராளுமன்றத்தில் தாம் அவ்வாறு கருத்து தெரிவித்ததாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்பில் அவ்வாறான விசாரணைகள் தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் மீண்டும் அறிவிப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹர்ஷ டி சில்வா கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து, வீதியில் தாம் கொல்லப்பட்டால், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“இவர்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள்? ஊழலை மறைக்கச் சொல்கிறார்களா? இப்படி மிரட்டல் விடுக்கலாமா?”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் ஆகியோர் ஹர்ஷ டி சில்வாவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »