Our Feeds


Sunday, June 23, 2024

Anonymous

விடுதலைப் புலிகள் - பயங்கரவாத அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை நீடித்தது UK

 



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த கோரிக்கையை பிரித்தானியா தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.


ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட கேரிக்கை மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு ஆணைக்குழு, வெளிப்படையான தீர்மானத்தை வழங்கி இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.


அகிம்சை வழிகளில் தனது அரசியல் மற்றும் சித்தாந்த இலக்குகளை அடைய முயல்வதால், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.


2001 மார்ச் 29ம் திகதி பிரித்தானிய இராஜாங்க செயலாளர் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார்.


இதனையடுத்து விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


கடந்த 2018 டிசம்பர் 18ஆம் திகதி பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை இரண்டில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது.


எனினும், இந்த விண்ணப்பம் 2019 மார்ச் 8ஆம் திகதி பயங்கரவாத அச்சுறுத்தல்களின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »