Our Feeds


Saturday, June 29, 2024

SHAHNI RAMEES

T20 World Cup 2024 final - தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா



 ரி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும்

தென்னாபிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்ட தீர்மானித்து.


அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மேலுமொரு அதிர்ச்சியாக அமைந்தது.


கேசவ் மகாராஜ் ஒரே ஓவரில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் இருவரின் விக்கெட்டினையும் வீழ்த்தி அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமாரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 3 ஓட்டங்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.


பவர் பிளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை எடுத்திருந்தது.



இந்த சூழலில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் அக்‌ஷர் படேல். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அக்‌ஷர் படேல் அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், விராட் கோலியுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார்.


துபே களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 59 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.


இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆண்ட்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மார்கோ ஜேன்சன் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.


அதன்படி 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோள்ளியுற்றது 


 அந்த வகையில் அணி 9 ஆவது ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி தனதாக்கிக் கொண்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »