இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதன்படி 20/20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் டி 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கிண்ணத்துடன், உலக கிண்ண வரலாற்றிலேயே அதிக்கூடிய பரிசுத்தொகையைப் பெற்றுக் கொள்ளும்.
மேலும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு எதிர்பார்க்கப்படும் தொகையான 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அரையிறுதிச் சுற்றில் தோல்வியடையும் அணிகளுக்கு 787,500 அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு முழுப் போட்டியிலும் அணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.