Our Feeds


Tuesday, June 4, 2024

ShortNews Admin

SLPP க்குள் மோதல் ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதி - நடந்தது என்ன?



ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றது.


இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவிற்கும் சக நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.


எனினும், பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு இருவரையும் சமரசம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவில் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் குணதிலக்க ராஜபக்சவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.


மஹிந்தானந்த அளுத்கமகே அவரைத் தள்ள முற்பட்ட போது குணதிலக்க ராஜபக்ச மாடிப்படியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்தில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


எவ்வாறாயினும், குணதிலக்க ராஜபக்ச எம்.பியுடன் தாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஆனால் அவரை தள்ள முயற்சிக்கவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »