கல்விப் பொதுச் சாதரானதர 2023 (2024) பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (23) தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சிப்பதாகவும், இந்த வாரத்துக்குள் முடியாவிட்டால், இந்த வாரம் முடிந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 4,52,979 பொதுச் சாதரானதர பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதோடு 3,87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.