Our Feeds


Wednesday, June 12, 2024

Anonymous

தேர்தல் கூட்டணிக்கு ஆட்களை இழுக்கும் முயற்சி | monarch imperial ஹோட்டல் 9ம் நம்பர் ரூமில் நடந்த ரகசிய பேச்சு? - நடந்தது என்ன?

 



ஜனாதிபதித் தேர்தலுக்கு பணிகளை ஆரம்பிக்கும் காலம் நெருங்கிவிட்டது. இன்னமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக போட்டியிடுவதற்கான தயார்ப்படுத்தல்களை செய்யவில்லை.


பொது வாக்கெடுப்பை நடுத்துவது குறித்து சில கருத்துகளையும் ஐ.தே.கவில் உள்ள ரணிலின் சகாக்கள் கூறிவருகின்றனர். ஆனால், ரணில் ரகசியமாக சில நகர்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.


சஜித் தரப்பின் முக்கிய தலைமைகளை தம்பக்கம் சாய்த்தால் மாத்திரமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என கணக்கு போட்டுள்ளார்.


ராஜபக்சர்களை ஏற்கனவே தம்பக்கம் வளைத்துள்ள ரணில், சஜித் தரப்பை உடைத்துவிட்டால் அநுரகுமார மாத்திரமே தமக்கு போட்டியாளராக வருவார் என்பது அவரது கணிப்பு.


சஜித் தரப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் ரணிலின் சகாக்கள் ஜயவர்தனபுர monarch imperial ஹோட்டலில் 9ஆம் இலக்க அறையில் கடந்த வாரம் இரவு நேர விருந்துடன் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.


இந்த இரவு நேர விருந்தில் 9 பேர் கலந்துகொண்டுள்ளனர். சஜித் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி ஒன்றின் தலைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் கூட்டணியை அமைக்க பாடுபட்டவர் என்றும் தெரியவருகிறது.


ரணிலின் ஆசிரிவாதத்துடன், மஹிந்த அமரவீர, நிமல் லான்சா, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சுசில் பிரேமஜயந்த தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியின் தலைவர்களும் சஜித் அணியின் முக்கிய தலைவர்கள் இருவருமே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.


மஹிந்த அமரவீரவும், நிமல் லான்சாவுமே இந்த ரகசிய இரவு விருந்தை ஏற்பாடு செய்துள்ளனர்.


அம்பலாங்கொடையில் அண்மையில் சு.க நடத்தி பொதுக் கூட்டத்தில் 7ஆயிரம் வரையிலான ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால் சு.கவின் மற்றுமொரு தரப்பாக உள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு அதிர்ச்சியடைந்துள்ளது.


அதேபோல் தற்போது கட்டியெழுப்பப்படும் கூட்டணியை கண்டும் மைத்திரி தரப்பு அச்சமடைந்துள்ளது. ராஜபக்சர்களிடமிருந்து விடுபட்டு சரணடைய இடமில்லாதிருந்த தரப்பினருக்கு சு.க தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியானது தற்காலிக கூடாரமாக அமையும் என எதிர்பார்க்கின்றனர்.


சஜித் தரப்பில் இருந்து முக்கிய இரண்டு தலைவர்களை தம்பக்கம் ஈர்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என ரணில் எண்ணுகிறார். அதனால் சு.கவின் இந்த முயற்சிக்கு அவர் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.


ராஜித சேனாரட்ன மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளவர்களாக தெரியவருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »