ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்பானவர்கள் எனக் கூறி இந்தியாவில் கைதான 4 பேரும் ISIS சிந்தனையுடையவர்கள் என்பதை காட்டுவதற்காக இலங்கையில் வைத்து வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீடியோவில் பங்கெடுத்துள்ள நான்கு சந்தேக நபர்களும் பைஅத் - சத்தியப்பிரமாணம் வழங்குவதற்காக பயிற்றுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, ISIS பயங்கரவாதிகள் வலது கை ஆள்காட்டி விரலை உயர்த்தி சத்தியம் செய்வார்கள் என்றும் இந்தியாவில் பிடிபட்டவர்களின் வீடியோவில் இடது கையை உயர்த்தி சத்தியம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளதாகவும் இது ISIS பயங்கரவாதிகளின் நடைமுறைக்கு மாற்றமானது எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வீடியோ போலியானது என வீடியோ எடுத்த நபரும் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நால்வரின் தலைவன் என கூறப்படும் ஒஸ்மான் ஜெராட் என்பவன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று இந்திய பிரஜை ஒருவரை அழைத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தீவிரவாத சம்பவம் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும், இது நாட்டின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்காக இந்தியா செல்வதாக பைஅத் - சத்தியம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வீடியோவை ஒஸ்மான் ஜெராட் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி: DC