புத்தளத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி, 40 அணிகள் பங்கேற்பு, Zygon Red மீண்டும் சாம்பியன்!
YM டிராவல்ஸ் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் Zone அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட Clash of Zahirians - Season 5 கால்ப்பந்தாட்ட போட்டியானது கடந்த ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புத்தளம் சாஹிரா மைதானத்தில் வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்தது.
இக் கால்பந்தாட்டாப் போட்டியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களின் அணிகள் பங்கேற்றதோடு இப்போட்டியில் Zygon Red அணியினர் தொடர்ந்து 4 ஆவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டனர்.
மேலும் இக்கால்பந்தாட்ட போட்டியில் Zygon Red அணியின் வீரரான முசாக்கிர் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும் சிறந்த கீப்பருக்கான விருது Pulsed அணி வீரர் ஜாப்ரிஸ் அவர்களுக்கும்,Fair Play விருது Z10 Knights அணியினருக்கும் வழங்கப்பட்டாதோடு, Most Popular Batch விருது மற்றும் ஒரு நாள் Swimming Pool Party இற்கான பணமும் Zygon அணியினருக்கும் வழங்கப்பட்டு போட்டிகள் இனிதே நிறைவுப் பெற்றது.
ஜே.எம்.பாஸித்