Our Feeds


Friday, June 28, 2024

Sri Lanka

பியூமி ஹன்சமாலியின் நிறுவனத்திற்கு CID விசாரனை !


பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதனப் பொருட்கள் நிறுவனம் மீதான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொதிகள் சேவை நிறுவனத்தின் நான்கு அதிகாரிகளிடம் CID-யினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் அந்த நிறுவனத்தின் தலைவரும் அடங்குவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலதிக வாக்குமூலங்களை வழங்குவதற்காக நான்கு நபர்களும் இன்று (28) முன்னிலையாகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதேவேளை, நாளை (29) பியூமி ஹன்சமாலியிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »