இலங்கையில் செய்மதி இணையச் சேவையை ஆரம்பிக்க
STARLINK நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒதழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பொது கலந்தாய்வு விவரம் நாளை வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிடுகின்றது.
உலகின் முன்னணி செல்வந்த வர்த்தகரும், டெஸ்லா நிறுவனம் மற்றும் X சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளருமான எலன் மாக்ஸ்ஸிற்கு சொந்தமான நிறுவனமே StarLink ஆகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எலன் மாக்ஸ்ஸிற்கும் இடையில் இந்தோனேஷியாவில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே செய்மதி இணையச் சேவையை இலங்கையில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.