கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
தென் கொரிய எல்லைப் பகுதிக்குள் வட கொரிய இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வருவதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதைத் தடுக்க தென் கொரிய இராணுவம் போர்க்கால எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து வட கொரிய வீரர்கள் திருப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஞாயிறு(ஜூன் 9) இரவில், வட கொரியாவிலிருந்து 300க்கும் அதிகமான பலூன்களில் குப்பைகள் அடங்கிய பைகளை தொங்கவிட்டு, அவற்றை தென் கொரிய எல்லைக்குள் பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வட கொரிய எல்லையில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி மாசுபாட்டை தென் கொரியா ஏற்படுத்தியது. வட கொரியா மீதான உளவியல் ரீதியிலான தாக்குதலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக வட கொரியா பலூன் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.