மனித சதையை உண்ணும் ‘ஸ்ட்ரேப்டொகோகல் டொக்சிக் சொக் சின்ட்ரோம்’என்ற நோயை உருவாக்கும் பக்டீரியா நாட்டிற்குள் உள்வரும் ஆபத்து கிடையாது என சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட மருத்துவ நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
48 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்படு ஒருவகை பக்டீரியா நோய் தொற்று ஜப்பானில் பரவி வரும் நிலையில், அது தொடர்பான பாதிப்புகள் இலங்கைக்கு ஏற்படுமா? என நேற்று பாராளுமன்றத்தில் சமன்பிரிய ஹேரத் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொவிட் வைரஸ் போன்று அல்லாது இந்த பக்டீரியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கொவிட் வைரசாக உருவெடுத்ததாலேயே அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.
ஜப்பானில் மேற்படி பக்டீரியா நாட்டுக்குள் உள்வரும் நிலை காணப்படாவிட்டாலும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்டப்பட்டிருக்கிறது.
வைரஸ் ஆக அன்றி பக்டீரியாவாக இது உருவெடுத்துள்ளதால் மருந்துகள் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுவதுடன் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.