Our Feeds


Tuesday, June 18, 2024

ShortNews Admin

ஜனாதிபதி ரனிலின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க முயற்சி - சாத்தியமா?



ஜனாதிபதியின் பதவிக்காலத்தை பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக  மேலும் ஒருவருடம் நீடிக்க பேச்சு பேச்சுவார்த்தை


2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசினால் 5 வருடங்களாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களாக மீண்டும் அதிகரிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


2015ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் 3/2  பெரும்பான்மையினூடாக  5 வருடங்களாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலத்தை  பாராளுமன்றத்தில் 3/2 ஐ பெற்று 6 வருடங்களாக மீண்டும் அதிகரிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


பாராளுமன்ற 3/2  ஊடாக குறைக்கப்பட்ட பதவிக்காலத்தை அதே பாராளுமன்ற 3/2 இனால் அதிகரிகரிக்க முடியும் என  இது தொடர்பில் பல சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது.


தற்போதய அரசுக்கு பாராளுமன்றத்தில் 3/2 பெற முடியாத நிலையில் இது சத்தியமற்றது என கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »