Our Feeds


Saturday, June 29, 2024

Sri Lanka

சம்பளம் கொடுப்பதில் சுவிட்சர்லாந்துக்கு முதலிடம்..!


 குறித்த நேரத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளைப் பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, 68.8 வீதம் சுவிஸ் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆய்வுகளின் மூலம், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது


ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது டென்மார்க் 94.2 வீதம்;, போலந்து 82.7 வீதம் மற்றும் நெதர்லாந்து 76.1 வீதம்; என குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே குறித்த நேரத்தில் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் 46.7 வீதம், இத்தாலி 41.1 வீதம் மற்றும் போர்த்துக்கல் 19.2 வீதம் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கும் தரவரிசையில் கீழே உள்ளன.


போக்குவரத்து மற்றும் தளபாடங்கள், தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உள்நாடு மற்றும் தொலைதூர போக்குவரத்துத் துறைகளில் குறித்த நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் மோசமான நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


உலகம் முழுவதுமே பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »