காலி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலையடுத்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது குறைவடைந்துள்ளது.
இதனால், மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, நுகர்வோரையும் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, காலி மீன்பிடி துறைமுகத்தில் 1 கிலோ கிராம் பலயா மீனினது விலை 1,300 ரூபாவாகவும், 1 கிலோ கிராம் கெலவல்லா மீனினது விலை 1,400 ரூபாவாகவும், 1 கிலோ கிராம் தெலியா மீனினது விலை 1,300 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.