பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு மேலாக ஆளில்லா விமானம் போன்ற ஒரு பொருளை அனுப்பிய குற்றச்சாட்டில் இரண்டு இந்திய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், குறித்த பொருள் ஆளில்லா விமானம் அல்ல எனவும், அது பறக்கும் வகையிலான பந்து போன்ற பொம்மை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார்;
"இதுவரை எந்த பாதிப்பான விடயங்களும் அடையாளம் காணப்படவில்லை. அது ஆளில்லா விமானம் அல்ல, மாறாக பறக்கும் வகையான பந்துப் போன்ற பொம்மையாகும்''
எவ்வாறாயினும், விசாரணைகள் தொடர்வதால் இரு நபர்களும் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் குறித்த சமூக ஊடகங்களில் பரவலாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினையாக இருப்பதாக பலர் கருதுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலைமை எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும், வேறுவிதமாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும் பொலிஸ் வட்டாரம் மீண்டும் வலியுறுத்தியது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பாக குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.