சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) 43 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த அமைச்சருடன் நேற்றைய தினம் (12) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வேலை நிறுத்தம் காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.