Our Feeds


Wednesday, June 26, 2024

Zameera

காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்


 ஜூலை 1ஆம் திகதியுடன் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கடவுச்சீட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய பின்னர், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மட்டுமே அதற்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ள இ-பாஸ்போர்ட் முறையை கருத்திற்கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »