Our Feeds


Tuesday, June 11, 2024

SHAHNI RAMEES

நண்பருடன் சேர்ந்து கணவன் அரங்கேற்றிய கொடூரம் - மனைவி உயிரிழப்பு



 தலஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டி

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.


 


மாலபே, தலஹேன பிரதேசத்தில் வாடகை வீட்டில் கொலை செய்யப்பட்ட யுவதி மற்றும் அவருடைய கணவரும் வசித்து வந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி இரவு, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு, யுவதியின் கணவரும், அவரின் நண்பரும் குறித்த யுவதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.


 


ஐந்து நாட்களுக்கு முன் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளதாகவும் படுகொலை செய்யப்பட்ட யுவதி மாலபே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.


 


கொலை செய்யப்பட்ட யுவதியின் கணவருக்கு 31 வயது மற்றும் அவரது நண்பருக்கு 44 வயதுடையவர் எனவும் விசாரணையின் பொது தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசதரணைகளை தலங்கம் பொலிஸ் நிலையத்தினூடாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »