கடந்த 2021 பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், அதன் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்திய பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் போட்டியிட்டார்.
அதே தொகுதியில் பதானை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட்டார். மேலும் பா.ஜ.க. சார்பில் நிர்மல் குமார் சஹா போட்டியிட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பராம்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் யூசுப் பதான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து அசத்திய அவர், தற்போது அரசியலிலும் வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார்.