நாளை(27) மற்றும் நாளை மறுநாள்(28) அனைத்து சேவைகளில் இருந்தும் விலகும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட கிராம அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதனை தெரிவித்தார்.