Our Feeds


Thursday, June 6, 2024

SHAHNI RAMEES

வாகன இறக்குமதியில் மின்சார, ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை

 

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.



அதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதிர்காலத்தில் அறிவிக்குமெனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.



 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் ‘ஆரோக்கியமான சூழலுக்கு பயனுள்ள காணி பாவனை, பசுமையான திணைக்களம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



 மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வுத் திட்டம், அரச நிறுவனங்களின் வளாகங்களில் மரம் நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளதுடன், இதன் மூலம் நகர்ப்புறங்களில் காற்றின் வெளியேற்றத்தைக் குறைக்க பங்களிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »