Our Feeds


Tuesday, June 18, 2024

Zameera

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை குறைந்து இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு


 கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளதாகவும் மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளதுடன் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது.


இதற்கிடையில் இறப்புகள் 2017இல் 146,000இலிருந்து 2023இல் 181,000ஆக அதிகரித்திருந்தன.


திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »