சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லையென அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் வரை 42,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
நாட்டின் நுகர்வுக்குத் தேவையான தேங்காய் எண்ணெய் நாட்டில் உள்ளதால், தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாதென பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.