பிரான்ஸ் பாராளுமன்றத்தை கலைக்கப்படவுள்ளதாகவும் பொது தேர்தலுக்கு தயாராகுமாறும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
இதன்படி, பிரான்சில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய திகதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியம் அளிப்பதாக அந்நாட்டின் அரசியல் விஞ்ஞானி டொமினிக் மொய்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
"பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை." என அவர் மேலும் கூறியுள்ளார்.