உயர்தர மாணவரொருவர் தன்னை தானே துப்பாக்கியால்
சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை எத்கால பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை கண்டுபிடித்து தனது அறையில் நாற்காலியில் அமர்ந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவனுடன் பேசுவதற்காக அவரது அண்ணன் அறைக் கதவைத் திறந்தபோது, சம்பவத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கூறியுள்ளார்.
அந்த மாணவன் வீடியோ கேம்களுக்கு அடிமையாகியிருக்கலாம் என்றும் தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.