அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில்
தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று (31) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .நுவரெலியா அம்பேவல 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நானுஓயா நிருபர்