Our Feeds


Friday, June 14, 2024

Zameera

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிக்கான அனுமதி - ஆஷு மாரசிங்க


 நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நல்லமுறையில் முன்னெடுக்கப்படுவதாலே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட நிதி உதவிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனால் இந்த நிலையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருதது தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் பொரைுளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட  336 மில்லியன் டொலர் நிதி உதவிக்காள அனுமதி வழங்கப்பட்படிருக்கிறது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொண்டு அதன் இலக்கை அடைந்திருக்கிறது.

அதேபோன்று நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்க அமைய நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது. அதன் பிராரம் நாடு நல்ல ந்லையில் சென்று கொண்டிருக்கிறது என நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க சில கடுமையான தீரமானங்களை எடுத்திருந்திருந்தார். ஆனால் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைக்கு வந்துள்ளதால்., தற்போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில் குறைந்த வருமானம் உள்ள 24இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரண திட்டம் வழங்கி இருக்கிறது. அதேபோன்று  வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரித்து வருவதால், ரூபாவின் பெருமதி அதிகரித்து வருகிறது. அதன் பிரகாரம் பொருட்களின் விலை இருந்ததைவிட குறைவடைந்துள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான வேலைத்திட்டம் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட நிதி உதவி கிடைப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கிறது. எனவே இந்த வேலைத்திட்டங்களை அவ்வாறே தொடர்ந்து முன்னுக்கு கொண்டு செல்ல முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். இந்த வேலைத்திட்டத்தை மாற்றியமைத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போகும்.

மேலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேரதல் இடம்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் எடுக்கும் தீர்மானத்திலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது, நாட்டை பொறுப்பேற்க அன்று முன்வராத தலைவர்கள் தற்போது, நாடு ஸ்திர நிலைக்கு வரும்போது, தங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு பிரசாரம் செய்து வருகின்றனர். அதனால் மக்கள் இவர்களின் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிவெறச் செய்ய வேண்டும். ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியிலேயே மக்களின் வெற்றி தங்கி இருக்கிறது.ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால் மாத்திரமே நாட்டு மக்களுக்கு நாட்டின் நன்மைகளை அனுபவிக்க முடியுமாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »