T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்தரம் பெற்று தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு இருபதுக்கு போட்டியில் பப்புவா நியூகினியாவை உகண்டா அணி 03 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.