நேற்று (06) பிற்பகல் கொழும்பு Cinnamon Lake ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் (COYLE - Chamber of Young Lankan Entrepreneurs) 2024 ஜூன் மகா சபை கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
இதன்போது கலந்துகொண்டிருந்த நபர்களுடன் தொழில் முயற்சிகள் சம்பந்தமாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்ததோடு, தொழில்முனைவோருக்கு தோன்றியுள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.