ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோயொன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டோக்சிக் ஷொக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் குறித்த நோயினால் 30 சதவீதமானோர் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோயினால் இதுவரையில் 977 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.