Our Feeds


Sunday, June 2, 2024

ShortNews Admin

முட்டுக்கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது - அநுரகுமார

 

முழுமையாக சீர்குலைந்த நாட்டிற்கு ஒருபக்கத்தில்மட்டும் முட்டுக்கொடுத்து கட்டியெழுப்ப முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (1) நடைபெற்ற துறைசார் பொறியியலாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் உள்ளதுறை சார்ந்த நிபுணர்களில் பொறியிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, வெவ்வேறு துறைசார்ந்த பொறியியலாளர்கள் சாதனையாளர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் திறமைகளை நாடு முழுமையாக உள்வாங்கவில்லை. அவ்வாறு உள்வாங்கியிருந்தால் நாட்டில் தற்போதைய நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.

நாடு முழுமையாக சீர்குலைந்து விட்டது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக இருந்தால் ஒருபக்கத்தில் மட்டும் முட்டுக்கொடுத்து நிமிர்த்திவிட முடியாது. ஆனால் தற்போது நாட்டில் இருக்கின்ற சிலர் அவ்வாறு தான் நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு முனைகின்றார்கள். அது நீண்டகாலத்திற்கு சாத்தியமானவிடயமாகஅமையப்போவதில்லை.

ஆகவே நீண்டகாலத்திற்கு நிலைபேறானதொரு மாற்றதினை ஏற்படுத்துவதாக இருந்தால் அடிப்படையிலிருந்து மாற்றத்தினை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்தில் பங்கெடுப்பதற்கு அனைவரையும் அழைக்கின்றேன். நாட்டிலிருந்து வெளியேறியுள்ள துறைசார்ந்தவர்களையும் மீண்டும் அழைக்கின்றேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »