இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு
நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அடுத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளார்.
இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.