Our Feeds


Tuesday, June 4, 2024

Anonymous

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானம் - புதிய விலை இதுதான்!

 



சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.


அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.


திருத்தப்பட்ட விலைகள் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


தற்போது 4,115 ரூபாய்க்கு விற்கப்படும் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாய்.


5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 


2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 740 ரூபாவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »