விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்களுக்கும் அதன் பணிக்குழாமினருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்குமான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த செயற்பாடு குறித்து நிற்கின்றது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 2 ஆவது மதிப்பாய்வை நிறைவேற்றி 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.