Our Feeds


Monday, June 24, 2024

Zameera

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல் அதிகரிப்பு


 குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இதன் காரணமாக சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்பதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களில் கொழும்பில் உள்ள லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் இந்த நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் பலர் பதிவாகியுள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உணவை ஈக்கள் வராதவாறு வைத்திருப்பது, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துதல், கழிவறைக்குச் சென்றபின் கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு பரவுவதைத் தடுக்கலாம் என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »