உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு
சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன், புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்தார்.