Our Feeds


Thursday, June 20, 2024

Anonymous

இலங்கையில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் | பெண்கள் அதிகம் பாதிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை.

 



இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.


இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.


இந்த நோய்க்கான பாக்டீரியாக்கள் நீரில் கலந்த பிறகு, அது மனிதனின் கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் வழியாக மனித உடலில் நுழைகிறது.


ஒரு ஆண்டில் எலிக்காய்ச்சலால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருவதாக தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் துஷானி தாபரே தெரிவித்தார்.


எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.


இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை, குருணாகலை போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மாணிக்கக்கல் அகழ்வுத் தொழிலாளர்கள் மற்றும் கழிவுநீர், கால்வாய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எலிக்காய்ச்சல் அபாயத்தில் அதிகம் உள்ளதாகவும் டொக்டர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »