உலகில் வாழும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டளவில் 2 கோடியே 20 இலட்சமாக உயரக்கூடுமென இலங்கை புற்றுநோய் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை புற்றுநோய் சங்கத்தினால் புற்றுநோய் மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (18) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தொரிவிக்கப்பட்டது.
வெற்றிலை - பாக்கு காரணமாக ஆண்களுக்கு வாய்ப்புற்றுநோய் அதிகமாகப் பரவும் அபாயம்; காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
மது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களை குறைக்க முடியுமெனவும் புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உருவாகிறதெனவும் இலங்கை புற்றுநோய் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.