பஸ் கட்டணம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுமென சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
பஸ் கட்டணம் 5.27 வீதம் குறைக்கப்படுமென்றும்,
இதன் விளைவாக குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவிலிருந்து 28 ரூபாவாக குறைக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.மக்களிடம் நாங்கள் ஒரு சிறப்பு வேண்டுகோளை வைக்கிறோம், இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணக் குறைப்பின் பயனை 100 வீதம் பயணிகள் பெற வேண்டுமானால், அவர்கள் சில்லறைப் காசுகளை கொண்டு வர வேண்டும். இல்லையெனில், 30 ரூபாயாக இருந்த பஸ் கட்டணம் 28 ரூபாய்க்கு மாற்றப்பட்ட பின்னர் இந்த இரண்டு ரூபா பிரச்சனையாகயிருக்கும், மேலும் ஒவ்வொரு கட்டணத்திலும் இந்த இரண்டு மூன்று மற்றும் ஐந்து ரூபா போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல் இருக்க வாய்ப்புள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.