புதிய சட்ட மா அதிபராக பாரிந்த ரணசிங்க
நாளை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக அவர் தற்போது பணிபுரிகிறார்.இவர் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி .ரணசிங்கவின் புதல்வராவார்.
சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைநீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்த நிலையில் இந்தபதவிக்கு பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பாரிந்த ரணசிங்க பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்படலாமென ஜனாதிபதி செயலக தகவல்கள் கூறுகின்றன.