உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் சீனா நாட்டில் இடம்பெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று(23) மாலை சீன நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பயணித்துள்ளார்.
இவருடன் நீர் வழங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றுள்ளனர் என அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் சீனாவில் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதில் உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.
அத்துடன், சீன விஞ்ஞான ஆய்வகத்தின்(JRDC-Joint Research and Demonstration Center for Water Technology) அழைப்பையேற்று நீர் வளத்துறை, தோட்ட மற்றும் கிராமிய நீர்வளங்களை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை வடிவமைத்தல் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.