Our Feeds


Friday, June 28, 2024

SHAHNI RAMEES

பாடசாலை, மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் தரமற்ற உணவுகள்...!

 



பாடசாலை மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில்

வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.


பாடசாலை மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறைந்ததாக எழுந்துள்ள பொதுமக்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.


பாடசாலை சிற்றுண்டிச்சாலை கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், வறுத்த, அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும், அத்துடன் நொறுக்குத் தீனிகளை அகற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


பாடசாலை மருத்துவமனை கேன்டீன் உணவுகளின் தரம் குறித்த முறைப்பாடுகள் இருப்பின் சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு (MOH) நேரடியாகத் தெரிவிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.


பாடசாலை மருத்துவமனை கேன்டீன்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருந்தால் 0112112718 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நேரடியாக முறைப்பாடு அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »